Pages

Friday, 23 February 2018

அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை / Arulmigu Kudal Alagar Temple, Madurai

Koodal Azhagar Koil is a famous Hindu temple dedicated to Lord Vishnu located in the center of the city of Madurai, Tamil Nadu, India. Koodal is another name for Madurai and Azhaghar means The beautiful one, in Tamil. The temple is an ancient one and very close to the famous Meenakshi Amman Temple. It is one of the 108 divyadesams the holy abodes of Vishnu.


Worship Time :
Morning - 05.30 AM - 12.00 PM
Evening - 04.00 PM - 09.00 PM


S.NoPooja NamePooja Timing
1
Viswa Roopa Darshanam
06.00 AM.
2
Kaala santhi
08.00 AM.
3
Upasanthi
10.00 AM.
4
Uchikaalam
12.00 PM.
5
Saayaratchai
05.00 PM.
6
Rathiri upasanthi
07.00 PM.
7
Arthajaamam
09.00 PM.

Car festival
Float festival
A 10 days float festival takes place in the month of Maasi on Star Makham.

Other minor festivals
      Garuda Seva (Aani month),Sayana Seva, Three fruits decoration,Pavitra Utsava,Navarathri festival,Five Garuda seva,The hunting festival,Adyayana utsava, The Birth star Festivals of Alwar and Acharyas,Gajendra moksham,The New Year Day, Celestial Wedding Festival, Vasantha Utsava.

How reach the temple:
Reach Periyar Bustand in madurai from there it is 400m away.
From Maurai raiway station, it is going to be 850m walk or you can hire a auto.

More about the Temple:
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என்ற "திருப்பல்லாண்டு' பாடல் இயற்றப்பட்ட தலம் மதுரை. இவ்வூரில் கூடலழகர் என்ற பெயரில் பெருமாள் அருளுகிறார். மார்கழி மாதத்தில் இத்தலத்தை தரிசிப்பது சிறப்பு. அஷ்டாங்க விமானம், பெருமாள் கோயில்களில் 96 வகையான விமானங்கள் அமைக்கப்படும்.
     இதில் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் தருவதாகக் கருதப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதிலுள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை.
     மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.இத்தலம் கிருதயுகத்திலேயே அமைக்கப்பட்டு விட்டது. கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்களிலும் சிறப்புற்று விளங்குகிறது. எனவே இத்தல பெருமாள், "யுகம் கண்ட பெருமாள்' எனப்படுகிறார்.
தலச்சிறப்பு : கிருதாயுகம், கிரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகிய 4 யுகங்களிலும் இத்தலம்  சிறந்து விளங்குகிறது.  எம்பெருமான் இத்தலத்தில் அஷ்டாங்க விமானத்தில் அமர்ந்த  திருக்கோலத்தில்முதல் தளத்திலும், நின்ற திருக்கோலத்தில் இரண்டாம் தளத்திலும், சயன  திருக்கோலத்தில் மூன்றாம் தளத்திலும் காட்சி தருவது எழில்மிகு தோற்றமாகும்.  அருள்மிகு  கூடழகர் பக்தர்களை "வா" என்று அழைத்து "அபயம்" அளித்து "ஆஹீயாவரதன்",  "அபயதிருக்கரத்தன்" என்ற திருநாமத்தை கொண்டவராய் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.  திருமால்  வீற்றிருக்கும் விமானத்தில் தலையானதும் சிறந்ததுமான அஷ்டான விமானம் - திருவெட்டெழுத்து மந்திரமான "ஓம்நமோநாராயணாய" என்பதன் வடிவமாகும்.  பெருமானின்  மூன்று நிலைகளையும் கொண்ட இவ்விமானத்தை ஒருமண்டலம் (48 நாட்கள்) வலம் வந்தால் நினைத்தகாரியங்கள் கைகூடும் என்பது சிறப்பு.
தல வரலாறு : இங்கு சிவன் நடன கோலத்தில் நடராஜராக உள்ளார்.  நடராஜரின் ஆனந்த  தாண்டவத்தை பறை சாற்றும் இக்கோவில் சைவ சமய வழிப்படுக்கான கோவில் ஆகும்.  ஆனந்த  தாண்டவம் பிறத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து நிலைகளை  குறிக்கிறது.  உலகில் உள்ள எல்லா ஜீவ ராசிகளிலும் ஆனந்த தாண்டவம் நடைபெறும் என்பது  ஐதீகம்.
More photos.


Related Posts Plugin for WordPress, Blogger...